தமிழ்நாட்டில் மே மாதத்தில் மின் பற்றாக்குறை ஏற்படும்.

by Admin / 25-04-2026 02:26:53pm
தமிழ்நாட்டில் மே மாதத்தில் மின் பற்றாக்குறை ஏற்படும்.

அக்னி வெயில் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் வெயில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து காய்ந்து கொண்டிருக்கிறது. அதனால் மக்களிடையே மின்சார தேவையும் அதிகரித்து உள்ளது. மின்சார பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில் மத்திய மின்சார அமைச்சகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் மே மாதத்தில் தென் மாநிலங்களில், தமிழ்நாட்டில் மின்சார பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தினசரி மின் தேவை 19,679 மெகாவட்டில் இருந்து தற்போது 19,882 மெகாவாட்டாக அதிகரித்து உள்ளதாகவும் கோடை வெப்பம் மற்றும் ஏசி பயன்பாடு அதிகரிப்பு காரணமாக  தமிழகத்தில் மின் தேவை அதிகமாக உள்ளதாகவும் இதனால் மின்பற்றாக்குறை ஏற்படும் என்றும் மே மாதத்தில் உச்சபட்சமாக மின் தேவை 19,800 மெகா வாட்டாக இருக்கும் என்றும் இதில் 3,360 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய மின் துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo