தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை - ஓ.பன்னீர் செல்வம்

by Staff / 07-01-2024 02:10:13pm
தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை - ஓ.பன்னீர் செல்வம்

' கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ,சட்ட விதிகளை மதிக்காமல் காலடியில் போட்டு மிதிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் தான், அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அடிப்படை உறுப்பினராக இருப்பவர் கூட பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடலாம் என்று எம்.ஜி.ஆர் சட்டம் வகுத்தார். தற்போது சாதாரண தொண்டர்கள் போட்டியிட முடியாது. 10 மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தேவை என சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளனர் . இதனால் வசதி படைத்தவர்கள் தான் பதவிக்கு வர முடியும்.. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் எனதெரிவி.த்தாா்.

 

Tags :

Share via

More stories