டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின்

by Admin / 31-07-2026 06:26:09pm
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின்

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படக்கூடும் என்றநிலை தற்பொழுது மாறி உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்காமல் மனுவை நிராகரித்த சூழலில் உச்சநீதிமன்ற அமர்வு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் மதுபான கொள்முதல் பார் உரிமம் மற்றும் டெண்டர்ர்களின் முறைகேடு நடந்ததாக கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது புதிய வழக்கு பதிவு செய்திருந்தது இந்த வழக்கில் அவரை விசாரிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்ததை அடுத்து சென்னை உதயநிதி மன்றம் அவருக்கு ஜாமீன் வழங்காமல் அதை தள்ளுபடி செய்திருந்தது. அதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு மனு அளிக்கப்பட்டு அவர் மனு மீதான விசாரணையை அடுத்து அவர் கைது செய்யப்படுவதற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

 உச்ச நீதி மன்றம் ஜாமீன் வழங்கியதோடு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. அதன்படி பாஸ்போர்ட்டை புலனாய்வு அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் லஞ்ச ஒழிப்பு துறையின் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வழக்கின் சாட்சிகளையோ அல்லது ஆதாரங்களையோ எவ்விதத்திலும் கலைக்கவோ ஆதிக்கம் செலுத்துவோ முயற்சிக்கக் கூடாது என்றும் இந்த நிபந்தனைகளில் ஏதேனும் ஒன்றை மீறினாலும் லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உடனடியாக முன்ஜாமில் ரத்து செய்யப்படும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கையோடு கூடிய நிபந்தனையை அளித்துள்ளனர்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்னாள்  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால முன்ஜாமின்
 

Tags :

Share via

More stories

Logo