அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டம்

by Admin / 14-08-2024 09:11:15am
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார். இம் முற்றுகை போராட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் முழுமையான 100 நாள் வேலையை வழங்கிட வலியுறுத்தியும், கட்டுமான பணிகள் மற்றும் தனியார் நிலங்களில் வரப்பு மடித்தல் உள்ளிட்ட பணிகளில் நிதியை மடைமாற்றி குறைவான தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதை கைவிடக் கோரியும், தினக் கூலியான ரூபாய் 319 ஐ முழுமையாக பணியாளர்களுக்கு வழங்கிட வலியுறுத்தியும், ஒன்றிய பட்ஜெட்டில் குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும், 100 நாள் வேலை நாட்களை 200 நாட்களாக வழங்கிடவும், தினக்குலியை ரூபாய் 600 ஆக உயர்த்தி அறிவித்திட வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.இப்போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தேவேந்திரன், வேணி, தினேஷ், உட்பட சிவந்திபட்டி, கிழவிப்பட்டி, பஞ்சாயத்திற்குட்பட்ட கிராம பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை ஆர்ப்பாட்டம்
 

Tags :

Share via