சென்னை விமான நிலையத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநகர அரசுப் பேருந்து சேவை.

by Editor / 26-04-2025 08:11:18am
சென்னை விமான நிலையத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநகர அரசுப் பேருந்து சேவை.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் வசதிக்காக கடந்த 2002ம் ஆண்டு கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இடங்களுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னர் பல்வேறு காரணங்களால் இந்த சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், கொரோனா காலத்தில் விமான பயணிகளுக்காக மீண்டும் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்பின் இயக்கப்படவில்லை. இதனால் விமான நிலையம் செல்ல தனிப்பட்ட வாகனம் தவிர்த்து மெட்ரோ ரயில் சேவை முக்கிய போக்குவரத்தாக இருந்தது.இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் மாநகர அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. அமைச்சர்கள் சிவசங்கர், தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தனர். பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கம் மற்றும் அக்கரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கிளாம்பாக்கத்திற்கும், 30 நிமிடங்களுக்கு ஒருமுறை அக்கரைக்கு பேருந்துகள் இயக்கப்படும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : சென்னை விமான நிலையத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநகர அரசுப் பேருந்து சேவை.

Share via