ஆர்.என். ரவி ஆளுநர் பதவியிலிருந்து விடைபெற்றாா்.

by Admin / 12-03-2026 12:04:48am
 ஆர்.என். ரவி ஆளுநர் பதவியிலிருந்து விடைபெற்றாா்.

மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி இன்று கொல்கத்தா சென்றடைந்தார். இதற்கு முன்னதாக, அவர் தமிழ்நாடு ஆளுநர் பதவியிலிருந்து விடைபெற்றபோது சென்னை விமான நிலையத்தில்  காவல்துறை சார்பில்  அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தின் 22-வது ஆளுநராக அவர்  12 மார்ச் 2026காலை 11:30 மணியளவில் கொல்கத்தாவில் உள்ள லோக் பவனில் (ராஜ்பவன்) பதவியேற்க உள்ளார்.கல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார்.மேற்கு வங்க ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, ஆர்.என். ரவி இந்தப் புதிய பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார். ஆர்.என்.ரவிக்கு மாற்றாக, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கூடுதலாகக் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo