முன்னாள் திமுக மத்திய இணை அமைச்சர்  ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை.

by Editor / 05-10-2023 08:09:42am
முன்னாள் திமுக மத்திய இணை அமைச்சர்  ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் முன்னாள் மத்திய இணை அமைச்சரும்,திமுக எம்.பியும், தொழிலதிபருமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் 200க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான தி.நகரில் உள்ள ஓட்டலிலும்,குரோம்பேட்டையில் உள்ள எம்.பி.ஜெகத்ரட்சகன் உறவினர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.சென்னை புறநகர்ப் பகுதிகளில் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் 70க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைப்பெற்று வருகிறது.

 

Tags : முன்னாள் திமுக மத்திய இணை அமைச்சர்  ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் சோதனை.

Share via