தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை

by Staff / 06-11-2023 02:22:55pm
தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை

தீபாவளி பண்டிகை நவ.12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை விடுமுறை அளிக்கலாமா என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. தீபாவளியை கொண்டாட வெளியூரில் உள்ள பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். தீபாவளி மறுநாள் திங்கள்கிழமை வருவதால், விடுமுறைக்கு சென்றவர்கள் திரும்ப முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால், நவ.13ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில் ஆலோசனை நடத்தப்படுகிறது. விரைவில் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via