- எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் இல்லத்தில் அண்ணாமலை
எண் மண். என் மக்கள் நடைபயண பயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளத்தில் தனது பயணத்தை மேற்கொள்ள உள்ள நிலையில் - எட்டயபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் மணிமண்டபத்திற்கு சென்றார். அங்கு பாரதியார் வேடமணிந்து இருந்த பள்ளி குழந்தைகளுடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டார்.. மேலும் குழந்தைகளை வாழ்த்தினார். இதையடுத்து மகாகவி பாரதியார் இல்லத்திற்கு சென்று இல்லத்தை பார்வையிட்டார். அங்குள்ள பதிவேட்டில் கையெழுத்துயிட்டார்..
Tags :