by Editor /
01-07-2023
05:42:55pm
எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் இணைய வாய்ப்பே இல்லை என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தரப்பு தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், இனி எடப்பாடி பழனிசாமி தரப்புடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, ஒருமுறை இணைந்ததற்கான பாடத்தை நமக்கு கற்பித்து விட்டனர் என்றார். மேலும், கொங்கு மண்டல மாநாடு விரைவில் நடைபெறும், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
Tags :
Share via