அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் மற்றும் சைவம், வைணவம் குறித்து பேசிய பேச்சுக்கள் சர்ச்சைக்குள்ளானது. அமைச்சர் பொன்மொடியின் பேச்சினை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பயணியர் விடுதி முன்பு அதிமுக வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அவரை கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மாவதி தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மகளிர் அணியினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Tags : அமைச்சர் பொன்முடியை கைது செய்ய வலியுறுத்தி அதிமுக மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்