திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய குவிந்தபக்தர்கள்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வார்கள்.இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் முருகனுக்கு உகந்த நாளான கிருத்திகை என்பதாலும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி நீண்ட வரிசையில் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.விடுமுறை காரணமாக திருச்செந்தூர் கோவில் வளாகப்பகுதி, நாழிக்கிணறு, கடற்கரை பகுதி, பேருந்து நிலையம், மொட்டை போடும் இடம், வள்ளிகுகை என திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
Tags : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய குவிந்தபக்தர்கள்..