பைக்குடன் இளைஞர் உடல் அடக்கம்

குஜராத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த ஒரு இளைஞரின் உடலை, அவருக்குப் பிடித்த Royal Enfield Interceptor 650 பைக்குடன் சேர்த்து பெற்றோர் அடக்கம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. தனது மகனின் ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக, அவரது பைக்கையும் உடலுடன் சேர்த்து அடக்கம் செய்ததாக பெற்றோர் கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கண்களில் கண்ணீருடன் பகிர்ந்த உரையாடல் பலரது மனதையும் பாதித்துள்ளது.
Tags :