சர்ச்சை பேச்சு: சீமான் மீது வடலூரில் வழக்குப்பதிவு.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வடலூர் காவல் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.கலவரத்தை தூண்டும் விதமாக பேசியது மற்றும்,பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிட்டது என்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.திராவிடர் கழகத்தினர் அளித்த புகாரின் பேரில், கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags : சர்ச்சை பேச்சு: சீமான் மீது வடலூரில் வழக்குப்பதிவு.