தேர்தலின்போது யாரும் காசு வாங்கி வாக்களிக்க வேண்டாம்-விஜய் வேண்டுகோள்.

by Editor / 30-05-2025 11:08:43am
தேர்தலின்போது யாரும் காசு வாங்கி வாக்களிக்க வேண்டாம்-விஜய் வேண்டுகோள்.

நடிகரும் த.வெ.க,தலைவருமான விஜய் கடந்த 2ஆண்டுகாலமாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 3 கட்டங்களாக விஜய் கல்வி விருது வழங்கி வருகிறார். 3ஆம் ஆண்டு நிகழ்வு இன்று நடைபெற்றுவருகிறது.இதன் முதற்கட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இதில் வட மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், மாவட்டச் செயலாளர்கள் என 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு தொகுதிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர், 12ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேர், அவர்களின் பெற்றோர் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் மாமல்லபுரம் தனியார் ஹோட்டலுக்கு வந்த விஜய் முதலில் மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதன்பின் ‘மை டியர் யங் லீடர்ஸ்’ என கல்வி விருது நிகழ்ச்சி மேடையில் தனது பேச்சைத் தொடங்கிய விஜய், ஒரே ஒரு படிப்பை வைத்து மாணவர்கள் குழப்பிக்கொள்ள வேண்டாம் என்றும், நீட் மட்டுமே உலகம் இல்லை என்றும், நீட்டைத் தாண்டி உலகில் பல விஷயங்கள் உண்டு எனவும் ,மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில் பெரியாருக்கே சாதிச்சாயம் பூச முயற்சி நடந்திருக்கிறது" என்று த.வெ.க தலைவர் விஜய் குற்றம் சாட்டிய அவர் 

தொடர்ந்து ஊழல்வாதிகளைத் தேர்தலில் தேர்ந்தெடுக்காதீர்கள் என்றும் தேர்தலின்போது யாரும் காசு வாங்கி வாக்களிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை அடுத்த ஆண்டு வண்டி வண்டியாக வந்து அரசியல் கட்சிகள் கொட்டுவார்கள் என்றும் விஜய் விமர்சனம் செய்தா

 

Tags : தேர்தலின்போது யாரும் காசு வாங்கி வாக்களிக்க வேண்டாம்-விஜய் வேண்டுகோள்.

Share via