திமுக ஒன்றியச் செயலாளரின் அத்தை கொடுத்த புகாரில் திமுக எம்எல்ஏ அண்ணன் கைது.

by Editor / 30-05-2025 11:00:19am
திமுக ஒன்றியச் செயலாளரின் அத்தை கொடுத்த புகாரில் திமுக எம்எல்ஏ அண்ணன் கைது.

தமிழ்நாட்டில் திமுகவில் தற்போது கோஷ்டி பூசல் உச்சத்தில் உள்ளது.பல்வேறுமாவட்டங்களில் இந்தநிலை ஆரோக்கியமாக இருந்தாலும் சில மாவட்டங்களில் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் செயல்படுபவர்களை கண்டுகளையெடுத்தும் வருகிறது தலைமை.2026 சட்டமன்றத்தேர்தலை கருத்தில் கொண்டு சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க உத்திரவிட்டுள்ளநிலையில் உள்கட்சி விவகாரம் ஊருக்கு ஊர் தலைவிரித்தாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி 3 அணியாக செயல்பட்டுவருவது அனைவருக்கு தெரிந்த விஷயமே.

தூத்துக்குடியில்  சோலார் கம்பெனிக்கு நிலத்தைக் கேட்டு மிரட்டியதாக ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையா வின்  அண்ணன் முருகேசன் என்ற  எம்.சி. முருகேச பாண்டியன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டப்பிடாரம் தொகுதியில் எம்எல்ஏ சண்முகையா ஒரு அணியாகவும், ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியச் செயலாளர் இளையராஜா ஒரு அணியாகவும் செயல்படுகிறார்கள்.

இந்நிலையில் இளையராஜாவின் மாமாவான எட்டயபுரம் அருகிலுள்ள  தாப்பாத்தி மாரிமுத்து பெயரிலிருக்கும்  இளையராஜாவின் சிலோன்காலனி   நிலத்தை அமோசா சோலார் நிறுவனத்துக்காக ஆக்கிரமிப்பு செய்ய முயன்றதாக ஓட்டப்பிடாரம் போலிசில் புகார் கொடுக்கப்பட்டு எம்.சி. முருகேசப்பாண்டியன் மீது FIR போடப்பட்டது. (மார்ச் 2025)

அடுத்து, 2025  மே 29 அன்று  திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜாவின் அத்தை மாடத்தி, மாமா மாரிமுத்து இருவரும் எட்டயபுரம் தாப்பாத்தியில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு டூ வீலரில் தூத்துக்குடி நோக்கி வரும் போது முத்தையாபுரம் அருகே காரில் சென்று வழிமறித்து சண்முகையா எம்எல்ஏவின் அண்ணன் எம்.சி. முருகேசன் சிலோன்காலனி  நிலத்தைக் கேட்டு மிரட்டியதாக முத்தையாபுரம் போலிசில் புகார் கொடுக்கப்பட்டு திமுக எம்எல்ஏ அண்ணன் முருகேசன் கைதாகியுள்ளார்.

அதாவது திமுக ஒன்றியச் செயலாளரின் அத்தை கொடுத்த புகாரில் திமுக எம்எல்ஏ அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதான எம்.சி. முருகேசப்பாண்டியன் , புகார் கொடுத்த  திமுக ஒன்றியம் இளையராஜா இருவருமே ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : திமுக ஒன்றியச் செயலாளரின் அத்தை கொடுத்த புகாரில் திமுக எம்எல்ஏ அண்ணன் கைது.

Share via