அமெரிக்காவில் சோகம் - ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் பலி

by Admin / 03-08-2021 12:44:24pm
அமெரிக்காவில் சோகம் - ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் பலி



   
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா கவுன்டி பகுதியில் ராபின்சன் ஆர் 66 ரக ஹெலிகாப்டர் ஒன்று 4 பேருடன் புறப்பட்டுச் சென்றது.

சாக்ரமென்டோ பகுதிக்கு வடக்கே உள்ளடங்கிய பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.15 மணியளவில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பயணம் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via