அவலக்குரல் திமுக ஆட்சியாளர்களுக்குக் கேட்காதாது ஏன்.......... சீமான் கேள்வி

கண்ணீரோடு போராடும் தொழிலாளர்களின் அவலக்குரல் திமுக ஆட்சியாளர்களுக்குக் கேட்காதாது ஏன்? என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். அவரது அறிக்கையில், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்யாமல் காலங்கடத்தி வரும் தமிழ்நாடு அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்துக்குரியது. பொற்கால ஆட்சி நடைபெறுவது போலவும், மக்கள் முகங்களில் மகிழ்ச்சி பொங்குவது போலவும் திமுக அரசு கூறுவது பச்சைப்பொய் என தெரிவித்துள்ளார்.
Tags :