பெண்ணின் வளையலை கழற்றிய திமுக கவுன்சிலர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு குன்னூரில், அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்தி மொழி எதிர்ப்பு உறுதிமொழியேற்பு நிகழ்வில், திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன் நகராட்சித் தலைவர் சுசீலாவின் கையிலிருந்து வளையலை நைசாக கழற்ற முயற்சித்தார். இதனை பார்த்த அருகில் இருந்த மற்றொரு பெண் ஜாகிர் உசேன் கையை தட்டிவிட்டார். ஆனாலும் அவர் மீண்டும் மீண்டும் நகராட்சி தலைவர் சுசீலாவின் கையை பிடிக்க முயற்சித்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tags :