கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா மேள தாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா மேள தாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாகர்கோவிலில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த புனித சவேரியார் பேராலயத்தின் 10 நாள்கள் கொண்ட திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடையும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று தொடங்கியது. முதல் நாள் திருவிழாவான இன்று காலை திருப்பலி நடைபெற்றது.
மாலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. மேளதாளங்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு ஊர்மக்கள் கொடிப்பட்டத்தினை கொண்டு வந்தனர். பின்னர் புனித சவேரியார் பேராலய பீடத்தில் கொடியேற்றத்துக்கான கொடிகள் மந்திரிப்பு நிகழ்ச்சி நடந்தது. கொடிகளை புனித சவேரியார் உருவத்துடன் கூடிய மற்றும் திருசிலுவை (குருசு) கொடிகளை மந்திரித்து ஊர் தலைவரிடம் வழங்கப்பட்டது.பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க நடந்தது. அருட்பணியாளர் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது பேராலய மணி ஒலிக்கப்பட்டது. சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண்புறாக்கள் பறக்க விடப்பட்டன. மலர்களைத் தூவி பக்தர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன.இதனை தொடர்ந்து முதல்நாள் திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது.10-ம் நாள் திருவிழா அன்று தேர்ப்பவனி நடை பெறும். கொடியேற்று நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் குமரி மாவட்டத்தை சார்ந்த மக்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொது கலந்து கொண்டனர்.
Tags : கோட்டாறு புனித சவேரியார் பேராலய திருவிழா மேள தாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.