இந்தியாவில் நிலவும் நிலக்கரி தட்டுப்பாட்டை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடிவு
இந்தியாவில் நிலவும் பற்றாக்குறையை சரி செய்ய வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ய கோல் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. பல மாநிலங்களில் நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தடைபட்டு மின்வெட்டு அதிகரித்துள்ள நிலையில். அந்தந்த மாநிலங்கள் நிலக்கரி இறக்குமதி ஒப்பந்தங்கள் கோரியிருந்தனர். இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க அவசரகால ஏற்பாடாக 7 ஆண்டுகளுக்குப் பிறகு கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது. மேலும் மாநிலங்கள் கோரிய ஒப்பந்தங்களையும் நிறுத்திவைக்க வலியுறுத்தியுள்ளது.
Tags :