அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 21 முதல் 26 வரை மேற்கொள்ள உள்ளார்

by Admin / 14-02-2026 07:20:32pm
அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிப்ரவரி 21 முதல் 26 வரை மேற்கொள்ள உள்ளார்

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தனது அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வரும் பிப்ரவரி 21 முதல் 26 வரை மேற்கொள்ள உள்ளார். பிப்ரவரி 21 சனிக்கிழமை அன்று ஆவடி மற்றும் அம்பத்தூர் ,பிப்ரவரி 22 ,ஞாயிற்றுக்கிழமை மாதவரம் மற்றும் பொன்னேரி, 25 ,புதன்கிழமை மதுராவாயல் மற்றும் பூந்தமல்லி,பிப்ரவரி 26 ,தாம்பரம் மற்றும் பல்லாவரம். பயணத்தின் போது பொதுக்கூட்டங்கள் மற்றும் மக்கள்  கலந்துரையாடல் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 27 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளார். இக்கூட்டத்தில் அ.தி.மு.க  பத்து முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், அது குறித்தும் மகளிர்க்கு மாதம் 2000 ரூபாய் வழங்குவது குறித்தும் ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்குவது குறித்தும் மக்களிடம் கொண்டு செல்வார்.

 

Tags :

Share via

More stories