மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல்: அமைச்சர் முருகன்

by Staff / 24-09-2022 02:34:58pm
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல்: அமைச்சர் முருகன்

பா. ஜ. க. தேசிய தலைவர் நட்டா பேசியதை புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர் என மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.இது தொடர்பாக நிருபர்களிடம் முருகன் கூறியதாவது: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கிறார்கள். பா. ஜ. , தேசிய தலைவர் நட்டா கருத்து சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.எய்ம்ஸ் ஆரம்ப கட்ட பணிகள் 95 சதவீதம் முடிந்துவிட்டது என்று தான் நட்டா கூறினார். அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via