பயங்கர சாலை விபத்து - 2 பேர் பலி

by Staff / 19-01-2023 01:45:02pm
 பயங்கர சாலை விபத்து - 2 பேர் பலி

புஞ்சைபுளியம்பட்டி அடுத்த தேவம்பாளையம் பகுதியை சேர்ந்த கவுதம் (23) மற்றும் சந்தோஷ் (22) ஆகியோர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்றனர். பாறைப்புதூர் அருகே சென்ற போது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கவுதமும், சந்தோஷும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo