இந்திய ரிசர்வ் வங்கி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரிக்க அடுக்கு பாதுகாப்பு முறை
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் ஒன்றில் இருந்து ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளுக்கான அங்கீகார வழிமுறைகள் என்ற புதிய அடுக்கு பாதுகாப்பு முறையை அமுல்படுத்துகிறது. அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கும் குறைந்தபட்சம் ஓடிபி இரண்டு பாதுகாப்பு காரணிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்த இரண்டு காரணிகளில் ஒன்று கட்டாயமாக டைனமிக் முறையில் இருக்க வேண்டும் என்றும் அதாவது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு தனித்துவமான குறியீடாக இருக்க வேண்டும் என்றும் தெளிவுபடுத்தி உள்ளது. கடவுச்சொல் அதாவது பாஸ்வேர்ட் ஸ்மார்ட் போன் கார்டு அல்லது சாப்ட்வேர் டோக்கன் கைரேகை முக அடையாளம் போன்ற பயோ மெட்ரிக் முறைகள் ஒரு பரிவர்த்தனை வழக்கத்திற்கு மாறாக அல்லது அதிக மதிப்புடையதாக இருந்தால் கூடுதல் பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்ள வங்கிகளுக்கு அதிகாரம் அளித்துள்ளது பாதுகாப்பு குறைபாடுகளால் மோசடி நடந்தால் அதற்கு வங்கிகளே முழு பொறுப்பெடுக்க வாடிக்கையாளர்களுக்கு இழப்பு வழங்க வேண்டும் என்றும் வெளிநாட்டு கார்டு பரிவர்த்தனைகளுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை அதிகரிக்க அடுக்கு பாதுகாப்பு முறைகளை வலுப்படுத்தி வருகிறது. வெறும் எஸ்எம்எஸ் மூலம் வரும் ஓடிபி மட்டும் நம்பியிருக்காமல் பயோமெட்ரிக் மற்றும் ஆப் அடிப்படையிலான டோக்கன்களை பயன்படுத்த வங்கிகள் ஊக்கி வைக்கப்படுகின்றன. ஓடிபி திருட்டு மற்றும் சிம் ஸ்வாப்பிங் போன்ற மோசடிகளை தடுக்க இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன .பெரிய அளவிலான பண பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சோதனைகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன.
Tags :



















