பள்ளிகள் திறக்கப்படும் போது சுமார் ஒரு லட்சம் பள்ளி வாகனங்களை இயக்கப் போவதில்லை- தனியார் நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேஷன் சி. பி. எஸ் இ. பள்ளிகள்  சங்கம்

by Admin / 17-05-2026 03:08:00pm
பள்ளிகள் திறக்கப்படும் போது சுமார் ஒரு லட்சம் பள்ளி வாகனங்களை இயக்கப் போவதில்லை- தனியார் நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேஷன் சி. பி. எஸ் இ. பள்ளிகள்  சங்கம்

தமிழகத்தில் உள்ள தனியார் நர்சரி,பிரைமரி, மெட்ரிகுலேஷன் சி. பி. எஸ் இ. பள்ளிகள்  சங்கம் அரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் போது சுமார் ஒரு லட்சம் பள்ளி வாகனங்களை இயக்கப் போவதில்லை என்றும் சங்கம் தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன உதிரிப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் 3000 ரூபாய் மதிப்புள்ள  சி.பி .ஆர்.எஸ். உதவிகளை தனியார் பள்ளிகள் 18000 ரூபாய் கொடுத்து தான் வாங்க வேண்டும் என அரசு வலுக்கட்டாயமாக சொல்வதாக சங்கம் குற்றம் சாட்டி உள்ளது பள்ளி வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் எப் சி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் பள்ளி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். அத்துடன் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகிற மாணவர்களுக்கான கல்வி சான்றிதழ் கட்டண பாக்கியத்தை அரசு தங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் பத்தாயிரம் தனியார் பள்ளிகளுக்கு இன்னும் தொடர் தற்காலிக அங்கீகாரம் வழங்கப்படாமல் உள்ள சிக்கலை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பள்ளி கட்டடங்களுக்கான வரைபட அனுமதி பெறுவதில் உள்ள விதிமுறை பிணைப்புகளை தளர்த்தி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo