மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா கைது

இந்துமதகடவுள்களைவிமர்சித்தகுற்றச்சாட்டில்தேடப்பட்டுவந்தமதபோதகர்ஜார்ஜ்பொன்னையாகைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 18ஆம் தேதி, சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு என்ற பெயரில் அருமனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஜார்ஜ் பொன்னையா என்ற கிறிஸ்தவ மத போதகர் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் இந்து கடவுள்களையும் பிரதமர் மோடியையும் இழிவாகவும், மத்திய உள்துறை அமைச்சர், தமிழ்நாடு அமைச்சர்கள் , எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகளையும் சுட்டிக்காட்டி அவதூறாக பேசியதாகவும் புகார் எழுந்தது.அந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறையிடம் அனுமதி பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சு சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், மதுரை மாவட்டம், கள்ளிக்குடியில் மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :