கோடை வெயிலின் தாக்கத்தில் தவித்த மக்கள் மகிழ்ச்சி.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளநிலையில் பரவலாக பளப்பாகுதிகளில் கனமழை பெய்துவருகிறது.
வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளநிலையில் தென்மாவட்டங்களில் மட்டுமல்ல சென்னையிலும் கனமழை பெய்யத்துவருவதால் கோடை வெயிலின் தாக்கத்தில் தவித்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Tags : கோடை வெயிலின் தாக்கத்தில் தவித்த மக்கள் மகிழ்ச்சி