திமுக கூட்டணியில் தான் மதிமுக தொடர்ந்து இயங்கும் :மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

by Staff / 11-08-2025 09:52:55am
திமுக கூட்டணியில் தான் மதிமுக தொடர்ந்து இயங்கும் :மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மதிமுக பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது . இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது;  அகல ரயில் பாதை அமைக்க வாஜ்பாயிடம் தெரிவித்த பின் அவர் ரயில்வே அமைச்சரிடம் பேசி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது திராவிடத்தை பாதுகாக்கவே இந்த பிறவியில் உள்ளேன் அதற்கு எதிராக நான் ஒரு நாளும் பேசியதில்லை  நாடாளுமன்றத்தில் ஓய்வு பெறும் போது இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசும் போது ஒவ்வொரு விவாதத்துக்கும் தயாராகுங்கள் படியுங்கள் என்றேன்.

நான் தமிழ் ஈழ விடுதலைக்காக தூக்கியவாளை இறக்கமாட்டேன். ஸ்டெர்லைட்டை ஆலையை மீண்டும் கொண்டு வர 32 லட்சம் கோடி அதிபரான அனில் அஹர்வால் என்னைச் சந்தித்து பேச நேரம் கேட்டார்.

 நான் ஒருக்காலமும் சந்திக்க மாட்டேன் என கூறிய பின்னர் அட்டர்னி ஜெனரல் என்னை தொடர்பு கொண்டு என்  அலுவலகத்துக்கு  வந்தார். நீங்கள் ஸ்டெரிலைட்டை பற்றி தவறாக புரிந்துள்ளீர்கள். அனில் அகர்வால் உங்களை சந்திக்க விரும்புகிறார் அவர் எங்கு வேண்டுமானாலும் வருவார் என்றார். 
 அதன் பின்னர் அவரிடம் நான் நீங்கள் வந்த நோக்கமும் இடமும் தவறு என கூறி அனுப்பி விட்டேன். 

 பிரதமர் மோடி பதவியேற்புக்கு ராஜ பக்‌ஷே வரப்போவதாக அறிந்த நான் பிரதமரை நேரில் சந்தித்தேன் கொலைகாரன் ராஜபக்‌ஷேவை தமிழர்களின் கோவில்களை உடைத்து நொறுக்கியவனை எப்படி அழைக்கலாம் என்றவுடன் பிரதமர்  கேன்சல் செய்வதாக கூறினார். 

 நான் அழைப்பிதழை திரும்ப பெறுங்கள் இல்லாவிட்டால் கூட்டணி முறியும் நாங்கள் வெளியேறுவோம் ஆட்சிக்கு எதிராக போராடுவோம் என கூறி போராட்டமும் நடத்தினோம்

 பாஜகவை எதிர்க்கும் எந்த கட்சியாவது அவர்கள் பதவியேற்பு விழாவுக்கு கருப்பு கொடி காட்டி போராடியதுண்டா நாங்கள் போராடியுள்ளோம். கூட்டணி சுய நலத்துக்காவோ பதவிக்காகவோ கூட்டணி வைப்பதில்லை மதிமுக.இங்கே  இந்து  இஸ்லாமிய சகோதரர்கள் வாழ்கிறார்கள், ஒற்றுமையாக வாழுங்கள்  யார் வந்து அதை அகற்ற முயன்றாலும் இடம் கொடுக்காதீர்கள், இந்துக்கள் முஸ்லீம் கள் ஒற்றுமையை சிதைக்க பாஜக பல வடிவம் எடுக்கிறது .


பொது சிவில் சட்டம் கொண்டு வர போகிறார்கள் அதை உபி யோகி ஆதித்யநாத் தனி நபர் மசோதா தாக்கல் செய்தார்  அதை அனுமதிக்க நான் விடவில்லை பலர் வெளியேறி விட்டனர் . அதே போல் நீங்களும் வெளியேறுங்கள் என கூறினார் ஆனால் நான் வாக்களித்து விட்டு தான் வந்தேன் 

 காஷ்மீர் நேஷனல் அஜென் டாவில்  கையெழுத்திட்டேன்.  காஷ்மீரை பாஜக 3 துண்டாக்கி அந்த  மக்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளி கொட்டிவிட்டார்கள் அகமதாபாத்தில் பிரயாக் ராஜில் ஆர் எஸ் எஸ் இந்து அமைப்புகள் மாநாடு நடத்தினார்கள் அதில் பல பிரகடனங்கள்.

 இந்தியாவை பாரதம் என அழைக்க வேண்டும், டெல்லி தலைநகர் இல்லை வாரணாசி தலை நகர்
 இஸ்லாமியர்கள் கிருத்துவர்களுக்கு வாக்குகள் கிடையாது, ஆட்சி மொழி குறித்த பிரகடனங்கள்
 இந்தியா முழுவதும் சுற்றறிக்கை அனுப்பினார்கள், மத சார்பின்மை கூட்டாட்சி என்ற இரு சொற்களும் முகப்புரையில் சேர்க்கப்பட்டதை நீக்க பாஜக முயற்சித்து வருகிறது, கூட்டாட்சி வேண்டும் என்பதற்கு தனி மசோதா கொண்டு வந்தவன் நான். இந்து கோவில்களில் கருவறைகளில் உள்ள,சிலைகளை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமேரிக்கா அனுப்ப திட்டமிட்டார். நான் தான் அதை தடுக்க முதலில் குரல் கொடுத்தேன் , அதன்  பின்னர்  மாதிரி சிற்பங்கள் மட்டுமே சென்றது 

கல்வித்துறைக்கான 37, 000 கோடி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது  ஆனாலும் திமுக திராவிட மாடல் ஆட்சி அனைத்து மாநில அரசுகளையும் கவர்ந்துள்ளது. இந்தியை எதிர்த்தோம் ரத்தம் சிந்தினோம் இப்போது கேரளா உட்பட மாநிலங்கள் எதிர்க்க தொடங்கி உள்ளன.

 திமுக  கூட்டணியில் தான் மதிமுக இயங்கும்.  பத்திரிக்கைகளில் அணி மாற போவதாகவும் பாஜகவுக்கு தூது விடுவதாகவும் செய்தி எழுதி உள்ளனர் .  மகாபாரதத்தில் கர்ணன் கவச குண்டலங்களை வேண்டுமானால் இழந்திருக்கலாம் . ஆனால் நான் நேர்மை கவசத்தை எவரிடமும் இழக்க மாட்டேன் தமிழக மக்களுக்காக குரல் கொடுப்பேன். கட்சியின் உயிர் நாடி வைகோ அல்ல கழகத்தின் தொண்டர்கள் தான்,அவர்களின் கால்களில் நான் மண்டியிடுகிறேன்  இவ்வாறு வைகோ பேசினார்.
[12:16 AM, 8/11/2025] Esakkirajan: 

 

Tags : திமுக கூட்டணியில் தான் மதிமுக தொடர்ந்து இயங்கும் :மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசினார்

Share via