மாமியாரை கொலை செய்து மருமகள் காவல் நிலையத்தில் சரண்.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த அய்யம்மாள் (79) இவரது மருமகள் தேவி (36) இருவருக்கும் கடந்த மூன்று ஆண்டு காலமாக மாமியார் மருமகள் சண்டை இருந்து வந்துள்ளது. முன்விரோதம் காரணமாக நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்த தனது மாமியார் அய்யம்பாளை, தேவி கழுத்து நெறித்து தலையில் அடித்தும் கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேட்டவலம் போலீசார் இறந்து போன அய்யம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாமியாரை கொலை செய்த தேவி வேட்டவலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
கொலைக்கான காரணம் குறித்து மருமகள் தேவியிடம் போலீசார் தீவிர விசாரணை.
Tags : மாமியாரை கொலை செய்து மருமகள் காவல் நிலையத்தில் சரண்.



















