தென்னந்தோப்பில் தீ விபத்து

by Staff / 28-02-2023 04:54:12pm
தென்னந்தோப்பில் தீ விபத்து

பல்லடம் வடுகபாளையம் ஹாஸ்டல் ரோடு பகுதியில் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. இந்த நிலையில் அங்கு திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கம் உள்ளவர்கள் பல்லடம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பல்லடம் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமாரசாமி தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று தென்னந்தோப்பில் இருந்த காய்ந்து போன புற்களில் பற்றிய தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் தீ தென்னை மரங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

 

Tags :

Share via