திருமணத்தில் துப்பாக்கிசூடு.. ஒருவர் பலி

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் அருகே கோரயா கிராமத்தில் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் 45 வயதான பரம்ஜித் சிங், தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கலந்துகொண்டு உற்சாகமாக நடனம் ஆடி கொண்டிருந்த போது, அருகிலிருந்த மற்றொரு நபர் கொண்டாட்டத்திற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியை சுட்டார். ஆனால், தவறுதலாக வந்த ஒரு குண்டு பரம்ஜித் சிங்கை தாக்கியுள்ளது. இதன் விளைவாக, கீழே விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags :