உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு வர காரணம் அவர் உழைப்பு அவரை உயர்த்தி இருக்கிறது-அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில் கலந்துகொண்டு தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது:
அண்மையில் மருத்துவர் ஆசிரியர் வக்கீல் தாக்கப்பட்டதை அரசியலாக்குகிறார்கள் அதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை அவர்களுடைய சொந்தப் பிரச்சினைதான் காரணம், மருத்துவமனையில் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு வருபவர்கள் அனைவரையும் செக் செய்து சோதனை செய்து அனுப்ப முடியாது பல நோயாளிகள் வருவார்கள், தமிழகத்தில் பெண்கள் யாரையும் சார்ந்து வாழக்கூடாது அவர்கள் உழைக்க வேண்டும் அவர்களுக்கு தன்னம்பிக்கை வர வேண்டும் அதற்காகத்தான் நமது முதல்வர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். அதுபோல மகளிர் கவலை இன்றி பணிக்குச் செல்ல தங்களது குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வருகிறார், இந்த திட்டங்கள் எல்லாம் பெண்களுக்கு தைரியம் கொடுக்கக்கூடிய திட்டங்கள், இந்தியாவிலேயே பெண்களுக்கு சொத்துரிமை கொண்டு வந்தது முன்னாள் முதல்வர் கருணாநிதி தான்.திமுக ஆட்சியில் அதிமுக ஆட்சியில் இல்லாத திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன,பத்தாண்டு காலம் அவர்கள் என்ன செய்தார்கள்
திமுக கூட்டணியை யாரும் ஆட்டி பார்க்க முடியாது அசைத்துப் பார்க்கவும் முடியாது வலிமையான கூட்டணியோடு இருக்கிறோம் மக்கள் எங்களை நம்புகிறார்கள் திமுக ஆட்சி அசைத்துப் பார்க்க எந்த கொம்பனாலும் முடியாது. தொடர்ந்து தமிழகத்தை சிறப்பான முறையில் ஆட்சி நடக்கிறது.
துணை முதல்வர் ஒரு செங்கலை கையில் வைத்துக் கொண்டு பிரச்சாரம் செய்து கடுமையாக உழைத்தார் இந்தியாவில் எந்த கூட்டணிக்கும் கிடைக்காத வெற்றி திமுகவுக்கு கிடைத்திருக்கிறது துணை முதல்வர் பதவிக்கு அவர் வர காரணம் உழைப்பு அவரை உயர்த்தி இருக்கிறது வாரிசு அரசியல் கிடையாது என்றார்
Tags : உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவிக்கு வர காரணம் அவர் உழைப்பு அவரை உயர்த்தி இருக்கிறது