பென்சில் புயல் கரையை கடக்கும் பொழுது பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
இன்று முப்பது பதினொன்று 2024 பிற்பகல் பென்சில் புயல் கரையை கடக்கும் பொழுது எழுவதில் இருந்து 90 km வேக காற்றுடன் கனமழை ஐகன மழை பெய்யக்கூடும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும் மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சென்னை புதுச்சேரி காரைக்கால் இடையே புயல் கரையை கடக்க உள்ளதாகவும் புயல் நெருங்கி வரும் சூழலில் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள மாவட்டங்களில் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் சென்னைக்கு வரும் விமானங்களும் காலையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று சென்னையில் இருந்து கடற்கரைச் சாலைகளான பழைய மகாபலிபுரம் சாலை வழியாக இருமுகமாகவும் செல்லும் பேருந்து போக்குவரத்து தமிழக அரசு நிறுத்த உத்தர விட்டுள்ளது.
சென்னை ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு புயலால் அதிக பாதிப்பாக கூடியபகுதிகளாக சொல்லப்பட்டுள்ள இடங்களில் மக்கள் வெளியில் வரவேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. செங்கல்பட்டு காஞ்சிபுரம் விழுப்புரம் கடலூர் கள்ளக்குறிச்சி புதுச்சேரி திருவண்ணாமலை பெரம்பலூர் அரியலூர் மயிலாடுதுறை தஞ்சை திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :