20 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.

by Editor / 28-01-2025 09:31:58am
20 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலருக்கு தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பிருப்பதாக தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகளுக்கு (என்.ஐ.ஏ)ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள்  இன்று அதிகாலை முதலே அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனை சென்னை உள்பட சுமார் 20 இடங்களில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னையில் புரசைவாக்கம் பகுதியிலுள்ள ஓர் அடுக்குமாடிக் கட்டடம் உள்பட மொத்தம் 5 இடங்களிலும், மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் 15 இடங்களிலும் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடைபெற்று வருகிறது.

என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. சோதனை நிறைவடைந்த பின்னரே ஏதேனும் ஆவணங்கள் சிக்கியுள்ளதா அல்லது தகவல் ஏதும் தெரியவந்ததா என்பது குறித்து தெரிய வரும் என கூறப்படுகிறது.

 

Tags : NIA raids at 20 places

Share via