12 ஆயிரம் பேர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பம்

by Editor / 07-07-2021 08:14:10am
12 ஆயிரம் பேர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர  விண்ணப்பம்

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்காக இதுவரை 12 ஆயிரம் மாணவ மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்வதற்காக 5ம் தேதி வரை 12 ஆயிரத்து 261 மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 9 ஆயிரத்து 933 பேர் மட்டுமே தங்கள் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பியுள்ளனர் என்று தொழில் நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆ ண்டு, இரண்டாம் ஆண்டில் சேர்வதற்கு கடந்த மாதம் 25ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வரும் நிலையில், இம்மாதம் 12ம் வரை அவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-2021ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு 9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சியாக கருதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள்.2021ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் மதிப்பெண்கள் இல்லாமலேயே பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம். இதையடுத்து சிறப்பு பிரிவினருக்கான கவுன்சலிங் இம்மாதம் 19ம் தேதி தொடங்குகிறது.

 

Tags :

Share via

More stories

Logo