மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தடை செய்யப்பட்ட பகுதிகள்: மக்களே உஷாரா இருங்க!

by Admin / 28-08-2021 01:53:22pm
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தடை செய்யப்பட்ட பகுதிகள்: மக்களே உஷாரா இருங்க!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  

 மயிலாடுதுறை, ராமநாதபுரம், விழுப்புரம், தர்மபுரி, கரூர், திண்டுக்கல் புதுக்கோட்டை, ராணிபேட்டை,  விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்கள்  கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாக தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், கொரோனா அலையின் தாக்கம் சில நாட்களாக அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 9 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளது.

கடந்த ஜூலை 30 தேதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 487 ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, செப்டம்பர் 13ம்தேதி நிலவரப்படி  633 ஆக அதிகரித்துள்ளது. அதில் ராமநாதபுரம், விழுப்புரம், திண்டுக்கல் ராணிப்பேட்டை, கரூர், புதுக்கோட்டை விருதுநகர், தர்மபுரி, மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லாத மாவட்டங்களாக மாறியுள்ளதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், அதிகபட்சமாக  சென்னையில் 201 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளதாகவும், அதேப்போல்,குறைந்தபட்சமாக திருப்பதூர் மாவட்டத்தில் 1 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. சென்னையில் மீண்டும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via