எம்ஜிஆர்-க்கு பிறகு யாரும் வெற்றி பெறவில்லை - நடிகர் கார்த்திக்

by Staff / 11-04-2024 12:46:22pm
எம்ஜிஆர்-க்கு பிறகு யாரும் வெற்றி பெறவில்லை - நடிகர் கார்த்திக்

மதுரை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் கார்த்திக் இடம் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “எனது மூத்த சகோதரர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். எம்ஜிஆர்-க்கு பிறகு அரசியலுக்கு வந்த எந்த நடிகரும் பெரிய அளவில் வெற்றிப் பெறவில்லை. சினிமாவில் இருப்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது என மக்கள் நினைக்கின்றனர். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றார்.

 

Tags :

Share via