கனடா, ரஷ்யாவில் முழுமையாக தெரிந்த  கங்கண சூரிய கிரகணம்: 

by Editor / 10-06-2021 05:58:56pm
கனடா, ரஷ்யாவில் முழுமையாக தெரிந்த  கங்கண சூரிய கிரகணம்: 


இந்த ஆண்டின் கங்கண சூரிய கிரகணம் கனடா, ரஷ்யா நாடுகளில் முழுமையாக தெரிந்தது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம், கடந்த மே 26ம் தேதி நிகழ்ந்தது. இந்த கிரகணம் இந்தியாவில் தெரியவில்லை. வழக்கமாக சந்திர கிரகணம் நிகழ்ந்து 15 நாட்களில் சூரிய கிரகணம் நிகழும். அதன்படி, ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 10ம் தேதி  நிகழும் என நாசா அறிவித்துள்ளது.
சூரியன் நிலவை மறைக்கும் அந்த நேரத்தில், முழுமையாக மறைக்க முடியாமல் சூரியனின் கருப்பு பகுதியைச் சுற்றிலும் ஒரு நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இது கங்கண சூரிய கிரகணம் ஆகும். இந்த கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.42 மணிக்குத் துவங்கி மாலை 6.41 மணி வரை நிகழ்ந்தது. 
இந்தியாவில் லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இருப்பவர்களால் மட்டுமே இதை கண்டனர் அதாவது, அருணாச்சல பிரதேசம் மாநிலம் திபாங் வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகிலிருந்து மாலை 5.52 மணியளவில் மிகச் சிறிய பகுதியையம் அதேபோல், லடாக்கின் வடக்கு பகுதியில், கிரகண நிகழ்வின் கடைசி நேர நிகழ்வினை காண முடிந்தது.
மற்ற நாடுகளை பொறுத்தவரையில் கனடாவின் சில பகுதிகள், வடக்கு ரஷ்யா மற்றும் கிரீன்லாந்து ஆகிய பகுதிகளில் இருப்பவர்கள் இந்தச் சூரிய கிரகணத்தை முழுமையாகப் பார்க்க முடிந்தது. கிழக்கு அமெரிக்கா, வடக்கு அலாஸ்கா, கனடா, கரீபியனின் சில பகுதிகள், ஐரோப்பா, ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பகுதியாக தெரிந்ததாக கூறப்படுகிறது.

 

Tags :

Share via