ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் - நாளை தீர்ப்பு

by Staff / 09-11-2023 11:37:48am
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் - நாளை தீர்ப்பு

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆன்லைன் கேம் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு, தேதி குறிப்பிடப்படாமல் வழக்கை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில், இவ்வழக்கில் நாளை நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இச்சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரமில்லை என்றும் ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு எனவும் நிறுவனங்கள் நீதிமன்றத்தில் வாதம் முன்வைத்திருந்தன. ஆன்லைன் சூதாட்டத்தால் வேலையில்லா இளைஞர்கள், தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், போலீசார் என இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

Tags :

Share via
Logo