டேபிள் டென்னிஸ் வீரர்விஷ்வாதீனதயாளன் விபத்தில்பலி சட்டசபையில் இரங்கல் தீர்மானம்

83-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மேகாலயாவில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்ளிட்ட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
அசாம் தலைநகர் கவுகாத்தில் இருந்து மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் கற் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த லாரி டேபிள் டென்னிஸ் வீரர்கள் பயணித்த கார் மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் டேபிள் டென்னிஸ் இளம் வீரர் தீனதயாளன் விஷ்வா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கார் விபத்தில் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் தீனதயாளன் விஷ்வா உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி,முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்,உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த தமிழ்நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு.சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Tags :