இந்திய தேசிய காங்கிரசின் 137-ஆம் ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு கொடியேற்றுவிழா

by Editor / 29-12-2021 01:34:14am
இந்திய தேசிய காங்கிரசின் 137-ஆம் ஆண்டு நிறுவன  நாளை முன்னிட்டு கொடியேற்றுவிழா

இந்திய தேசிய காங்கிரசின் 137-ஆம் ஆண்டு நிறுவன நாளை முன்னிட்டு, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அவர்கள் 150 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி நினைவு கம்பத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் சேவாதளத் தலைவர் .குங்பூ விஜயன் தலைமையில் நடைபெற்ற சேவாதள அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சத்தியமூர்த்திபவனில் அலங்கரிக்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசின் தலைவர்கள் மற்றும் தியாகிகளின் திருவுருவப் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு  காங்கிரசின் முன்னணித் தலைவர்கள்,மாநில, மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள்,துணை அமைப்புகள்,பிரிவுகள் மற்றும் துறைகளின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்

இந்திய தேசிய காங்கிரசின் 137-ஆம் ஆண்டு நிறுவன  நாளை முன்னிட்டு கொடியேற்றுவிழா
 

Tags :

Share via

More stories

Logo