ரயில்வே வாரியம் அதிரடி முடிவு..?

இந்திய ரயில்வேயில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் கொண்டுவந்தவண்ணம் உள்ளது.தற்போது பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே இறுதிப் பயணிகள் அட்டவணையைத் தயாரிக்க ரயில்வே வாரியம் முடிவுசெய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..முன்பதிவு செய்தும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட் உறுதியாகாத பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது .இந்த திட்டம் பொது மக்கள் மத்தில் வரவேற்பை பெரும் என்பதில் மாற்றமில்லை.
Tags : ரயில்வே வாரியம் அதிரடி முடிவு.