கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

by Editor / 04-09-2024 06:22:16pm
கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

 திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட குறிச்சிகுளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (39/2010) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிராஜ்தீன் (40) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. 22.07.2010 அன்று குறிச்சிகுளம் குளக்கரை அருகே சுப்பிரமணியனை சிராஜ்தீன் மற்றும் அவருடைய உறவினர்களான அதே பகுதியைச் சேர்ந்த லத்தீப், நாகூர் மீரான்(42), ஜெயபிரியா ஆகியோர் சேர்ந்து அருவாளால் தாக்கியதை தடுக்க வந்த சுப்பிரமணியனின் தாயான கோமதியம்மாளை கம்பால் தாக்கியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளனர். இதுகுறித்து மானூர் காவல்துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில் லத்தீப் உடல் நல குறைவு காரணமாக இறந்துவிட்டார். பின் ஜெயபிரியா என்பவர் நீதிமன்றம் மூலமாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 இவ்வழக்கு விசாரணை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 04.09.2024 இன்று விசாரித்த  நீதிபதி பத்மநாபன் எதிரிகளான சிராஜ்தீன், நாகூர் மீரான் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும் தலா ரூபாய் 1000/- அபராதமும் விதித்து தீர்பளித்துள்ளார்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த மானூர் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சிலம்பரசன் வெகுவாக பாராட்டினார்.

 

Tags : கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

Share via