தூத்துக்குடி மாவட்டத்தில்  1439 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிப்பு.

by Editor / 21-08-2023 09:55:15pm
தூத்துக்குடி மாவட்டத்தில்  1439 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  உத்தரவின்படி போலீசார் "மாற்றத்தை தேடி" என்ற சமூக விழிப்புணர்வு கூட்டம் நடத்தியதன் பயனாக  ஒரே நாளில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொது இடங்களில் இருந்த 341 ஜாதிய அடையாளங்களை கிராம மக்கள் தாமாக முன்வந்து அளித்தனர் - இதுவரை மொத்தம் 1439 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது.) தூத்துக்குடி உட்கோட்டத்தில் முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டல்காடு பகுதியில் 4 மின்கம்பங்கள், மின்வாரிய ட்ரான்ஸ்பார்மர் 1 என 5 இடங்களிலும்,

தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்தில் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழிக்குடி பகுதியில் 12 மின் கம்பங்கள், பொதுச் சுவர் 1, பேருந்து நிறுத்தம் 1 என 14 இடங்களிலும்
 
திருச்செந்தூர் உட்கோட்டத்தில் திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்விளை, வன்னிமாநகரம்,  திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வண்ணாதார்விளை, ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  ராஜமணியாபுரம், ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்திநகர், முக்காணி, குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குலசேகரன்பட்டினம், அண்ணாசிலை ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 88, பொது சுவர் 1 என 89 இடங்களிலும்,

ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்சந்தூர்பட்டி, செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லிர்குளம், முத்தாலகுறிச்சி, ஆழ்வார்திருநகரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செம்பூர், மணல்குண்டு, செல்வராஜ்நகர், குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கானம், சோனகன்விளை, ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆறுமுகமங்கலம்,  சேரகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமஞ்சபுதூர் ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் 75 மின் கம்பங்களிலும்,

மணியாச்சி உட்கோட்டத்தில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கவர்னகிரி, பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீனாட்சிபுரம், அல்லிச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 58, மின்வாரிய ட்ரான்ஸ்பார்மர் 1, தெருக்குழாய்கள் 2,  நெடுஞ்சாலைத்துறை அடையாள பலகை 8, பாலம் 7 என 76 இடங்களிலும்,

கோவில்பட்டி உட்கோட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூசாலிப்பட்டி, மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்திராநகர், நடராஜபுரம், கழுகுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு கழுகுமலை, கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செட்டிகுறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 35,  மேல் நிலை நீர்தேக்க தொட்டி 7, பொது சுவர் 3 என 45 இடங்களிலும்,

விளாத்திகுளம் உட்கோட்டத்தில் எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளியம்மன் கோவில் தெரு, ஆர்.சி தெரு, எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்துநகர் ஆகிய பகுதிகளில மின்கம்பங்கள் 4, மின்வாரிய ட்ரான்ஸ்பார்மர் 2 என 6 இடங்களிலும்,

சாத்தான்குளம் உட்கோட்டத்தில் மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனையூர், ராமசாமிபுரம், வப்பன்காடு, நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னமதிக்கூடல், ஆகிய பகுதிகளில் உள்ள மொத்தம் மின் கம்பங்கள் 26, மேல் நிலை நீர்தேக்க தொட்டி 2, பொது சுவர்கள் 2, பேருந்து நிறுத்தம் 1  என 31 இடங்கள் உட்பட இன்று ஒரே நாளில் மொத்தம் 341 இடங்களில் ஊர்த்தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் அந்தந்த பகுதி மக்கள் தாமாகவே முன்வந்து வெள்ளை நிற பெயிண்டால் ஜாதிய அடையாளங்களை அழித்தனர்.இதுவரை மொத்தம் 1439 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது.
 
ஜாதிய அடையாளங்களை தாமாக முன்வந்து அழித்த கிராம மக்களை மற்றும் மேற்படி காவல்துறையினர் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில்  1439 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிப்பு.
 

Tags :  1439 இடங்களில் இருந்த ஜாதிய அடையாளங்கள் அழிப்பு.

Share via