கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேபர்தமிழ்நாட்டின் 27 வது ஆளுநராக பதவிஏற்றாா்.
தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என் ரவி மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேபர் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாட்டின் 27 வது ஆளுநராக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ் ரூத் அரவிந்த் சர்மாதிகாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் புதிய ஆளுநருக்கு சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்விழாவில் ,தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
Tags :


















