வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் மாணவர்கள் தென்காசி வந்தனர்.

by Editor / 10-08-2024 11:36:53pm
வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் மாணவர்கள் தென்காசி வந்தனர்.

பண்டைய தமிழர்களின் கட்டிடம், சிற்பக்கலை, நீர்மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு,தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் என்றகலாச்சார பரிமாற்றம் மேற்கொள்ளும் சுற்றுலாத் திட்டமான ‘வேர்களைத் தேடி’ என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

இத்திட்டப்படி, அயல்நாடுகளில் வாழும் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட தமிழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, தமிழகம் வரவழைத்து தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமிதங்களை உணரும் வகையில் தமிழகத்தின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு, தமிழகஅரசு சார்பில் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதன் அடிப்படையில், சென்ற ஆண்டு இந்த பண்பாட்டுப் பயணத் திட்டத்தில், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மூலம் 4 நாடுகளைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களைக் கொண்டமுதற்கட்ட பயணம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில் 2-ம் கட்ட பயணமாக, தென்ஆப்ரிக்கா, உகாண்டா, குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை. பிரான்சு மற்றும் ஜெர்மனி ஆகிய 15 நாடுகளைச் சேர்ந்த100 அயலகத் தமிழ் இளைஞர்கள் வரவழைக்கப்பட்டு, ஆக.1 முதல் 15-ம் தேதி வரை 15 நாட்களுக்கு தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுவருகின்றனர்.இன்று தென்காசி மாவட்டத்திற்கு வந்த அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  கமல் கிஷோர் மற்றும் கோட்டாட்சியர் லாவண்யா பூங்கொத்துகளை கொடுத்து வரவேற்றனர்.

மேலும் வேர்களை தேடி திட்டத்தின் கீழ் தமிழகம் வந்தடைந்தது பல்வேறு அனுபவங்களை கொடுத்துள்ளது. அந்த வகையில் பாரம்பரியம், கலாச்சாரம், கட்டிடக்கலைகள் என அனைத்தையும் கண்டு ரசித்தது மகிழ்ச்சியாக உள்ளதாக கூறினர். மேலும் இந்த சுற்றுலாவை ரசித்ததன் வாயிலாக மீண்டும் தமிழகம் வந்துவிடலாம் என்ற எண்ணம் தோன்றுவதாகவும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தனர்.

இப்பயணத்தில் பங்குபெறும் அயலகத் தமிழ் இளைஞர்கள், தமிழகத்தின் கலாச்சார தூதுவர்களாகச் செயல்பட்டு தமிழர்களின் கலாச்சார பெருமைகளை அவர்களது நாடுகளில் பரப்புவர்.

வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் மாணவர்கள் தென்காசி வந்தனர்.
 

Tags : வேர்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் 15 நாடுகளைச் சேர்ந்த 100 அயலகத் தமிழ் மாணவர்கள் தென்காசி வந்தனர்.

Share via