மைசூர் - காரைக்குடி சிறப்பு ரயில்- தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு.

by Editor / 10-08-2024 11:43:42pm
மைசூர் - காரைக்குடி சிறப்பு ரயில்- தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு.

பயணிகளின் வசதிக்காக மைசூர் - காரைக்குடி இடையே ஒரு சிறப்பு ரயில் இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மைசூர் - காரைக்குடி சிறப்பு ரயில் (06295) மைசூரில் இருந்து ஆகஸ்ட் 14 மற்றும் 17 ஆகிய நாட்களில் இரவு 09.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறு மார்க்கத்தில் காரைக்குடி - மைசூர் சிறப்பு ரயில் (06296) காரைக்குடியில் இருந்து ஆகஸ்ட் 15 மற்றும் 18 ஆகிய நாட்களில் இரவு 07.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.10 மணிக்கு மைசூர் சென்று சேரும். இப்ப சிறப்பு ரயில்கள் மாண்டியா, மாடூர், ராம நகரம், கெங்கேரி, பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, குப்பம், சேலம் நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று  செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 குளிர்சாதன  மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6  இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மாற்று திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும். இந்த சிறப்பு ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு ஆகஸ்ட் 11 காலை 08.00 மணிக்கு துவங்குகிறது.

 

Tags : Mysore - Karaikudi Special Train - Organized by South Western Railway.

Share via