மது போதையில் தகராறு - கட்டிட தொழிலாளி வெட்டிக்கொலை.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள விஜயாபுரி கிராமத்தினை சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் பெரிய மாரியப்பன்(55), இவர் கட்டிட தொழில் செய்து வந்துள்ளார். இதே ஊரைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் மணிகண்டன்(40). முதலில் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்த மணிகண்டன் கட்டிட வேலைக்கு சென்று வருவதாக தெரிகிறது. பெரிய மாரியப்பன், மணிகண்டன் இருவரும் வேலை முடிந்ததும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது. வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை (19.03.2023) இரவும், இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். பின்னர் அங்குள்ள மடம் அருகே வந்த போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையெடுத்து மாரியப்பன் வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து மணிகண்டன் காலில் வெட்டியுள்ளார்.மேலும் தடுக்க முயன்ற போது கையிலும் வெட்டு விழுந்துள்ளது. இதையெடுத்து சுதாரித்து கொண்ட மணிகண்டன், பெரிய மாரியப்பன் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி, அவரை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்தில் பெரிய மாரியப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் கிடைத்தும் நாலாட்டின்புதூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பாற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்து விட்டு, காயத்துடன் இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்ததது மட்டுமின்றி, சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Tags :