தென்காசி:ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூட்டு போட்டு விட்டு வீட்டுக்கு சென்ற ஊழியர்கள்.

by Staff / 04-07-2025 10:06:40am
தென்காசி:ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பூட்டு போட்டு விட்டு வீட்டுக்கு சென்ற ஊழியர்கள்.

தென்காசி மாவட்டம் இடைகால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அந்த பகுதியில் போதிய இட வசதி இல்லாததின் காரணமாக  நயினாரகரம் பகுதியில் செயல்பட்டு வருகின்றது இந்த நிலையில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சை அளிக்கும் வண்ணம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு மருத்துவர்கள் மூன்று செவிலியர்கள் மருந்தாகினர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் முழுமையாக இருந்து வருகின்றன இந்த நிலையில் மூன்றாம் தேதி வியாழக்கிழமை இங்கு இந்த பகுதியைச் சார்ந்த சிலர் காயம்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற பொழுது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூட்டப்பட்டு கிடந்ததாக கூறப்படுகிறது மேலும் அங்கு பணியில் உள்ள அதிகாரிகள் பணியாளர்கள் யாரும் இல்லாததன் காரணமாக அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் இது குறித்து சுகாதாரப் பணிகள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து இரவோடு இரவாக சுமார் 9 மணி அளவில் அங்கு துணை இயக்குனர் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் வந்து முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர் மேலும் உடல்நல குறைவு காரணமாக வந்த இரண்டு நபர்களுக்கு சிகிச்சை அளித்தனர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பூட்டு போட்டு பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்ற மருத்துவர் செவிலியர் மருந்தாளுனர் உள்ளிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Tenkasi: Employees who locked the primary health center and went home.

Share via